உலகம்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை!!

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளின்படி, மெட்டாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், டிக்டாக், மற்றும் கூகுளின் யூடியூப் உள்ளிட்ட தளங்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களுடன் பயனரின் வயதைச் சரிபார்க்க வேண்டும்.

இதற்குக் கட்டுப்படத் தவறும் நிறுவனங்கள் 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் செலுத்த நேரிடும், இது தோராயமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமம்.

அதேநேரம் வயது குறைந்த பயனர்கள் வைத்திருக்கும் ஏற்கனவே உள்ள கணக்குகள் உடனடியாக நீக்கப்படாது என்றும் அவர்களின் வயதுகளை சரிபார்க்க 06 மாதக் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்கையானது இளைஞர்களை இணையத்திலிருந்து துண்டிப்பதற்கோ அல்லது தொழில்நுட்பத்திற்கான அணுகலை மறுப்பதற்கோ வடிவமைக்கப்படவில்லை என்றும், மாறாக, இணையத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!