உலகம்

போரில் திருப்புமுனை : முக்கிய கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!! ஹிஸ்புல்லாவிற்கு ஏமாற்றம்!

லெபனானில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது.

தரைவழி தாக்குதல் மூலம் பியூபோர்ட் கோட்டையையும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பியூபோர்ட் கோட்டையின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தங்களது நாட்டு தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர்.

பியூபோர்ட் கோட்டையை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியிருப்பது, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஒரு வியத்தகு திருப்புமுனை என்று பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் இஸ்ரேல் படைகள் தங்களின் கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் கோட்டையும் அதன் மலைப்பகுதியும் புவியியல் ரீதியாக மிகவும் மூலோபாய முக்கியத்துவம் இடமாகும்.

இந்த உயரமான இடத்தைப் பயன்படுத்திதான் ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தாக்கியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!