எபோலா அச்சம் : காங்கோவுடனான எல்லையை மூடும் உகாண்டா!
எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான தனது எல்லையை உடனடியாக மூடுமாறு உகாண்டா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காங்கோ நோயாளிகளிடமிருந்து வைரஸால் பாதிக்கப்பட்ட உகாண்டா சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஜெஸ்கா அலுபோ (Jesca Alupo) தலைமையிலான உள்ளூர் எபோலா பணிக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
இருப்பினும் இதுபோன்ற எல்லை மூடுதல்கள் பொதுவாக அச்சத்தின் காரணமாகவே செயல்படுத்தப்படுகின்றன, அவற்றுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
கிழக்கு காங்கோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். அங்கு கிட்டத்தட்ட 1000 பேர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.




