கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதியில் தீவிபத்து – 16 பேர் பலி!
கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 79 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் வடக்கே உள்ள நகுரு கவுண்டியில் (Nakuru County) இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கல்வி அமைச்சர் ஜூலியஸ் மிகோஸ் ஒகாம்பா (Julius Migos Ogamba ) சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டதுடன், இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் என விவரித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரம் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





