தைவானுக்கான ஆயுத விற்பனையில் நீண்டகால கொள்கையை மீறிய ட்ரம்ப்!!
ஈரானுடனான போர் தொடர்கின்ற நிலையில் தைவானுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் தற்காலிகத் தலைமைச் செயலாளர் ஹங் காவோ (Hung Cao) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
14 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் “மிக விரிவாக” விவாதித்ததாகவும், “அடுத்த குறுகிய காலத்திற்குள்” ஒரு முடிவை எடுப்பதாகவும் ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதன் மூலம், தைவான் குறித்த முடிவுகளை சீனாவுடன் இணைந்து எடுக்கக்கூடாது என்ற விதியை ட்ரம்ப் மீறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறாயினும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் ரகசியக் குறியீட்டுப் பெயரான “எபிக் ஃபியூரி”-க்குத் தேவையான ஆயுத பலத்தை அமெரிக்கா தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.




