இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் : ஒருவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் கிழக்கு சசெக்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் நபர் ஒருவர் சுகவீனமுற்றுள்ளதாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த குழுவினர் அவரை பரிசோதனை செய்த பின் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இதில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியது.
இந்த ஆண்டின் இதுவரையிலான வெப்பமான நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்று சுமார் 32.3°C வெப்பநிலை பதிவானது.
இது கடந்த 79 ஆண்டுகளில் பதிவான உச்சபட்ச வெப்பநிலையாகும்.





