2.5 மில்லியன் டொலர் மாயம் : 200 டொலர்களை மட்டும் மீட்க நடவடிக்கை!
திறைசேரியில் இருந்து குற்றவாளிகளின் கைகளுக்கு கிடைக்கப்பெற்ற 2.5 மில்லியன் டொலரில் இருந்து வெறும் 200 டொலர்களே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைபர் மோசடியால் மாயமாகிய பணத்தை மீட்க இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளனர்.
இதற்கமைய அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, திருடப்பட்ட நிதியின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கும், மீதமுள்ள நிதி மற்றொரு மாகாணத்தில் உள்ள வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், டெலவெயர் மாகாண வங்கி கணக்கு முற்றிலும் காலியாக உள்ளதாகவும், இரண்டாவது கணக்கில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த 200 டொலரை மீட்பதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




