17 ஆண்டுகளாக தொடர்ந்த சட்டப் போராட்டம் : ஒருவழியாக முடிவுக்கு வந்த வழக்கு!
2009-ஆம் ஆண்டு ரியோ-பாரிஸ் விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்தமை தொடர்பில் ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது மனிதப் படுகொலைக் குற்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 17 வருடங்களாக இடம்பெற்று வருகிறது. இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இரு நிறுவனங்களும் தலா €225,000 வரை அதிகபட்சமாக அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் 2023 ஆம் ஆண்டு இந்த குற்றச்சாட்டில் இருந்து இரு நிறுவனங்களும் நீக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.
பனி உறைந்த சென்சார்கள் தொடர்பான ஒரு சிக்கலை விமானப் பணியாளர்கள் தவறாகக் கையாண்டதால், விமானம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை விபத்து என்ற கோணத்தில் இருந்து திசைமாற்றப்பட்டது.
முறையற்ற பயிற்சி மற்றும் முந்தைய சம்பவங்கள் மீதான போதிய பின்தொடர் நடவடிக்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் மீது அரசு தரப்பு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





