பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : ஹோர்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த கப்பல்கள்!
ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஹோர்மூஸ் ஜலசந்தியை 03 எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பதாக கடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனக் கப்பல்களுக்கான விதிகளைத் தளர்த்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் எட்டியதைத் தொடர்ந்து, சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான சீன எண்ணெய்க் கப்பல்கள் ஜலசந்தியில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனக் கப்பல்களுடன் இணைந்து கொரிய எண்ணெய் கப்பல் ஒன்றும் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் 26 கப்பல்கள் கடந்து சென்றதாக ஈரான் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




