இஸ்ரேலின் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் : தேர்தல் பயத்தில் நெதன்யாகு!
இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அடுத்ததாக பொதுத் தேர்தல் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தோல்வியடைவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கான பூர்வாங்க வாக்கெடுப்பு ஏறக்குறைய ஒருமனதாக நிறைவேறியுள்ள நிலையில், ஒப்புதல் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதல், தொடரும் மோதல்கள், இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அந்தஸ்தில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றால் பொதுமக்களின் மத்தியில் நடப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.




