“மேற்காசிய போர்” – ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஆஸ்திரேலியா அதிருப்தி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மேற்காசியா போர் தொடர்பில் தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிவருவதால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிவிவகாரக் கொள்கையானது உலகிற்கும் மிகவும் கடினமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என இரு நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். பின்னர் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டது என அறிவித்தார். இன்று காலை நாம் விழித்தபோது , பரிசீலிக்கப்படுகின்றது என அறிவிப்பு வெளியாகின்றது.
இது உலகிற்கு மிகவும் கடினமானது, இதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.” எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese குறிப்பிட்டுள்ளார்.




