உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஈரானுக்கு அழைப்பு!

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளது.

எனினும், இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.

சீனாவிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளதால் இது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

உலகளாவிய ரீதியில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த ஆலோசனைகளுக்காகவே விசேட பாதுகாப்பு சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!