ஈரான் மீதான போர் குறித்து நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் இடையே கலந்துரையாடல்!
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கை தொடர்கின்ற நிலையில் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான போரை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ட்ரம்பின் சமீபத்திய சீனப் பயணம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் மத்தியக் கிழக்கு பகுதியில் மோதல் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




