அமெரிக்காவுடனான பதற்றம் – ட்ரோன்களை வாங்கிக் குவிக்கும் கியூபா!
அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் கியூபா 300-க்கும் மேற்பட்ட இராணுவ ட்ரோன்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ட்ரோன்களை பயன்படுத்தி குவாண்டநாமோ (Guantanamo) விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தளம், அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் (Axios) இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.
ட்ரோன் போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் ஹவானாவில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் இருப்பதன் காரணமாக, ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவை அச்சுறுத்தலாக கருதுகிறது.
ஈரானை தொடர்ந்து ட்ரம்பின் அடுத்த இலக்காக கியூபா மாறும் என்ற தகவல்களும் முன்னதாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




