Make England Great Again : ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்!! 40இற்கும் மேற்பட்டோர் கைது!
டாமி ராபின்சனின் ‘யுனைட் தி கிங்டம்’ பேரணி மற்றும் பாலஸ்தீன ஆதரவு நக்ஃபா தினப் பேரணி ஆகிய இரண்டு முக்கிய ஆர்ப்பாட்டங்களின் போது 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சுமார் £4.5 மில்லியன் செலவில் 4000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கணிசமான காவல்துறைப் பாதுகாப்பும் இருந்தபோதிலும், பல்வேறு குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் டாமி ராபின்சன் பேரணியில், ராபின்சன் உட்படப் பல பேச்சாளர்கள் அரசியல் ஈடுபாட்டிற்கு அழைப்பு விடுத்ததோடு, தற்போதைய தலைமையையும் விமர்சித்தனர்.
மேலும், கலந்துகொண்ட பலரும் ‘மேக் இங்கிலாந்து கிரேட் அகெய்ன்’ (Make England Great Again) தொப்பிகளை அணிந்திருந்தனர். இது இங்கிலாந்தில் புதிய தலைமையை மக்கள் தேடுவதை அடிகோடிட்டு காட்டியுள்ளது.





