இலங்கை செய்தி

எரிபொருள் இறக்குமதி செலவு 6 மடங்கு அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால் பொருளாதாரம் மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

எண்ணெய் இறக்குமதி செலவு, பெப்ரவரியில் 98 மில்லியன் டொலரிலிருந்து மார்ச்சில் 216 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 368 மில்லியன் டொலராகவும் உயர்ந்துள்ளது.

மே மாத இறக்குமதி 522 மில்லியன் டொலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரியுடன் ஒப்பிடுகையில், எண்ணெய் இறக்குமதி ஆறு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசலின் உண்மையான விலை சுமார் ரூ. 720 ஆக இருக்கும் நிலையில், அது தொடர்ந்து நுகர்வோருக்கு ரூ. 392 விற்கு விற்கப்படுகிறது.

இதன் விளைவாக அரசாங்கமும் பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் கணிசமான இழப்புகளைச் சந்தித்தன.

அரசாங்கம் ஒரு லிட்டருக்கு சுமார் ரூ. 100 மானியம் செலுத்தினாலும், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒரு லிட்டருக்கு ரூ. 492 மட்டுமே பெறுகிறது, இது செலவு மீட்பு அளவை விட கணிசமாகக் குறைவாகும்.

கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளால்பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 84 பில்லியன் இழப்புகள் ஏற்பட்டன.

உயர்ந்த விலையில் தற்போதைய நுகர்வு அளவுகளைத் தொடர்வது, டொலர் வெளியேற்றத்தை விரைவுபடுத்தி, பொருளாதாரத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!