பிரித்தானியாவில் உணவகம் ஒன்றின் வெளியே அமிலத் தாக்குதல்!
பிரித்தானியாவின் கிரேட்டர் மென்செஸ்டரில் (Greater Manchester) உள்ள துரித உணவகம் ஒன்றுக்கு வெளியே அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி சம்பவம் நேற்று மாலை ஆஷ்டன் (Ashton ) நகர மையத்தில் உள்ள துரித உணவகத்திற்கு வெளியே நடந்ததாகத் தெரிகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதி தற்போது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், அரிக்கும் தன்மை கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





