ஹண்டாவைரஸ் பாதிப்பு : கப்பலை நங்கூரமிட ஸ்பெயின் மறுப்பு!
‘ஹண்டாவைரஸ்’ என்ற ஆபத்தான எலி காய்ச்சல் பரவலால் பாதிக்கப்பட்டு கடலில் தவித்து வந்த நெதர்லாந்தின் ‘எம்.வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலை கேனரி தீவில் நங்கூரமிட ஸ்பெயின் மறுப்பு தெரிவத்துள்ளது.
பிராந்தியத் தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ (Fernando Clavijo ) பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் (edro Sanchez) இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேற்படி வைரஸ் தொற்றால் பிரெஞ்சு தம்பதியர் உட்பட ஜேர்மன் நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தம்பதியினர் கப்பலில் ஏறுவதற்கு முன்பு உஷுவாயாவில் (Ushuaia) பறவைகளை பார்க்கச் சென்றதாகவும், இதன்போதே வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.





