உலகம்

ருமேனியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு!

ருமேனியாவில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.

பிரதமர் இலி போலோஜனின் (Ilie Bolojan) ஐரோப்பிய ஆதரவு அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது நாட்டின் இறையாண்மைக் கடன் மதிப்பீடுகள், ஐரோப்பிய ஒன்றிய நிதிகளுக்கான அணுகல் மற்றும் அதன் நாணயத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியினர், போலோஜனின் இராஜினாமாவைக் கோரியதோடு,   ஐரோப்பிய ஆதரவு கூட்டணியிலிருந்து வெளியேறி, தீவிர வலதுசாரி எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து மேற்படி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கொண்டுவந்துள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து திடீர் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!