உலக அரங்கில் வலிமை இழந்த அமெரிக்கா: ஈரான் சுட்டிக்காட்டு!
சுதந்திரமான நாடுகளின் கொள்கைகளில் தலையிடும் வலிமையை அமெரிக்கா இழந்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனவே, அமெரிக்காவால் இனி ஏனைய நாடுகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்க முடியாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா தனது சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற கோரிக்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைதி பேச்சுக்கான ஈரானால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய முன்மொழிவுகளை அமெரிக்கா பரிசீலித்து வரும்வேளையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு கருத்து வெளியாகியுள்ளது.
சர்வதேச அரசியல் சூழல் மாறிவிட்டதால், அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய என ஈரான் கருதுகின்றது.





