இலங்கை

All Ceylon Emergency Vehicle Service திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்கள் சந்திப்பு!!

All Ceylon Emergency Vehicle Service  இன் மாவட்ட  இணைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (25) Nilaveli Royal Paradise விருந்தகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இதுவரை செய்யப்பட்ட சேவைகள் மற்றும் அதன் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

திருகோணமலை வைத்தியசாலையில் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஜனாஸாவை குளிப்பாட்டல் மற்றும் கபன் இடல் செய்வதற்கான மைய்யத் (Mayyath) வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திற்கான ஜனாஸா வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதுடன்,
இலங்கை முழுவதும் ஜனாஸா தேவைகள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம், அந்த ஜனாஸாக்களை அவர்களது வீடுகளுக்கு எந்த வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக கொண்டு சேர்ப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது All Ceylon ஜனாஸா சங்கத்தின் தலைவர் காதர் ஹாஜியார் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!