உலகம்

FIFA கால்பந்து தொடர் : பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கும் FBI!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் பிஃபா கால்பந்து தொடர் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என FBI இயக்குனர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

48 அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்தபோட்டியை காண உலகெங்கிலும் இருந்து சுமார் 03 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மிகப் பெரிய பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரோன்கள் மிக முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அச்சுறுத்தல் தகவல்களை நிகழ்நேரத்தில் பரிமாறிக்கொள்வதை எளிதாக்கும் வகையில்  46 நாடுகளின் காவல்துறைப் பிரதிநிதிகளுடன் FBI ஒரு கூட்டுச் செயல்பாட்டு மையத்தை நிறுவியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்வதால் ஏற்படும் பாதுகாப்புச் சிக்கல்கள், மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பான அதிகரித்த அச்சுறுத்தல்கள், ஈரானின் போட்டிகளின் போது ஏற்படக்கூடிய வன்முறைப் போராட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அபாயங்களை அவர் அடிகோடிட்டு காட்டியுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்