ஈரான் போரால் பனாமாவிற்கு அடித்த லக்!
ஈரான் போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்களால் வணிக நிறுவனங்கள் மாற்று வழியை தேட ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், பனாமா கால்வாய் வழியாகப் பயணிப்பதற்காக வணிக நிறுவனங்கள் 4 மில்லியன் டொலர் வரை செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என பனாமா கால்வாய் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், விநியோகச் சங்கிலிகளைச் சரிசெய்வதற்கும், நிலையற்ற இந்த மத்திய கிழக்கு நீர்வழியைத் தவிர்ப்பதற்காகவும், வணிக நிறுவனங்கள் பனாமா கால்வாயை நாடியுள்ளன.
சாதாரணப் பயணங்களுக்கு £300,000 முதல் £400,000 வரை செலவாகும் நிலையில், விரைவுப் பயணத்திற்கான கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
சுமாராக எரிபொருள் கப்பல் ஒன்று கூடுதலாக 4 மில்லியன் டொலர் வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது





