இந்தியாவில் பல வாகனங்கள் மோதி விபத்து – 11 பேர் பலி!
இந்தியாவில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிர்சாபூர் மாவட்டம், திராமண்ட்கஞ்ச் பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திரமண்டகஞ்ச் பள்ளத்தாக்கிலிருந்து லசோடா பகுதியை நோக்கி செல்லும் பாதையில், வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்திற்கு பின்னால் வந்த லொறியொன்று அந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோதலின் போது இரண்டு லாரிகளுக்கு இடையில் கார் ஒன்று சிக்கிக்கொண்டதாகவும், இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில், மற்றொரு வாகனமும் மோதி தீப்பிடித்தது என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
“இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





