யாழில் சோகம் : விபத்தில் தந்தை, மகன் பலி
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தந்தையும், மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இன்று அதிகாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இவர்களின் உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.





