உலகம் செய்தி

ஈரானில் முரண்பாடு இல்லை, கொள்கை நிலை சீராக உள்ளது – சர்வதேச நிபுணர் விளக்கம்

ஈரானின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடுகள் குறித்து வெளிவரும் முரண்பட்ட தகவல்கள், உண்மையில் உள்நாட்டு குழப்பத்தை காட்டுவதல்ல என சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஈரான் திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிபிசி ரேடியோ 4 ‘டுடே’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அலி வேஸ், ஈரான் ஆட்சி கொள்கை வகுப்பிலும்,
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டிலும் உயர் அளவிலான ஒருங்கிணைப்புடன் செயல்படுவதாக கூறினார்.

ஈரானில் இருந்து வரும் சில முரண்பட்ட செய்திகள் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிடும் மாற்றமான நிலைப்பாடுகளுக்கு எதிர்வினையாகவே பார்க்கப்பட வேண்டும் என்றார்

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் , நிகழ்வுகளின் தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாகவே
பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

மொத்தத்தில், இது உள்நாட்டு அரசியல் குழப்பத்தின் அறிகுறி அல்ல என கூறிய அவர்
மாறாக நிலைமையின் இயல்பான மாற்ற ஓட்டம் என அவர் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!