ஐரோப்பா செய்தி

கடும் கட்டுப்பாடு – பிரித்தானியாவில் புகைப்பழக்கமற்ற தலைமுறை சட்டம் நிறைவேற்றம்

புகையிலை மற்றும் வேப் தொடர்பான புதிய மசோதா பிரித்தானிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் 17 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாத நிலை உருவாகிறது.

2009 ஜனவரி 1க்கு பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிப்பு பழக்கத்தை தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது “புகைப்பழக்கமற்ற தலைமுறை” உருவாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

சட்டம் அமலுக்கு வந்தால், புகையிலை, வேப்பிங் மற்றும் நிகோடின் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை மேலும்
கடுமையாக கட்டுப்படுத்த அரசுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்படும்.

குழந்தைகள் அதிகம் இருக்கும் இடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் வேப்பிங் தடை செய்யப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பப் தோட்டங்கள் மற்றும் சில வெளிப்புற பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும், புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்களுக்கு மருத்துவமனைகளுக்கு வெளியே வேப்பிங் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாக பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி