சீதையம்மனை வழிபட்டு நாடு திரும்பினார் இந்திய துணை ஜனாதிபதி!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இன்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
புனித ராமாயணத்துடன் தொடர்புடைய இந்த ஆலயம், இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான ஆழமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளை நினைவூட்டும் அடையாளமாக திகழ்கிறது.
அதேவேளை, நுவரெலியா ராகலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மலையக மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டத்தையும் துணை ஜனாதிபதி பார்வையிட்டார்.
மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்ட நிலையில், இன்று மதியம் நாடு திரும்பினார்.







