உலகம் முக்கிய செய்திகள்

லூசியானாவில் துப்பாக்கிச் சூடு: 8 சிறுவர்கள் பலி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

லூசியானாவின் தெற்கு ஸ்ரீவ்போர்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

மூன்று வீடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து வாகனமொன்றைக் கடத்தித் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது பொலிஸார் அவரைத் துரத்திச் சென்று சுட்டதில், அவரும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களில் சிலருக்கு குறித்த துப்பாக்கிதாரி உறவினர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
error: Content is protected !!