ட்ரம்புக்கு ‘ஐஸ்’ வைத்த லெபனான் ஜனாதிபதி!
லெபனானில் நிலவும் பதற்றத்தைத் தணித்து போர்நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு லெபனான் ஜனாதிபதி Joseph Aoun நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு நன்றி கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, லெபனானில் நிலையான அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக இதன்போது ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த லெபனான் ஜனாதிபதி, இதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இரு நாட்டுத் தலைவர்களின் இந்த முயற்சி மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.





