வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை இராணுவ உபகரண உற்பத்திக்கு பயன்படுத்த ட்ரம்ப் திட்டம்!
அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகளை இராணுவ உபகரணங்கள் உற்பத்திக்கு பயன்படுத்துவது குறித்து விவாதிக்க, ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் உக்ரைனில் தொடரும் மோதல்களால் இந்த முயற்சி தூண்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள், ஜிஇ ஏரோஸ்பேஸ் (GE Aerospace) மற்றும் ஓஷ்கோஷ் (Oshkosh) போன்ற நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஓஷ்கோஷ் (Oshkosh) நிறுவனம் நவம்பர் மாதம் முதல் பென்டகனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்கள் ஆயுத உற்பத்திக்கு எவ்வாறு பங்களித்தார்களோ, அதேபோல் தற்போதும் ஆயத்தப்பணிகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ட்ரம்ப் நிர்வாகம் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களை 1.5 டிரில்லியன் டொலராக உயர்த்தவும் முன்மொழிந்துள்ளது.





