ஐரோப்பா

லண்டனைப் பாதுகாக்க “இரும்புப் பாதுகாப்பு அரண்” தேவை – பாதுகாப்பு ஆலோசகர் கருத்து!

ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து லண்டனைப் பாதுகாக்க ஒரு “இரும்புப் பாதுகாப்பு அரண்” தேவைப்படலாம் என்று இங்கிலாந்தின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2018 முதல்  2020 வரை அமைச்சரவைச் செயலாளராக பணியாற்றிய லார்ட் செட்வில் (Lord Sedwill), பெருகிவரும் அபாயகரமான உலகில் பிரித்தானியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நமக்கு நிச்சயமாக முறையான வான் பாதுகாப்பு தேவை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாடு முழுவதையும் பாதுகாக்கும் ஒரு இரும்புக் குவிமாடம் அமைப்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லை, ஆனால் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவத் தளங்களைப் பாதுகாக்க அது சாத்தியமாகலாம்.

வளைகுடா நாடுகள் ஏறக்குறைய அதுபோன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளன.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!