செய்தி

‘ஈரானுக்கு ஆயுதம் வழங்காதீர்’: தனது கோரிக்கையை சீனா ஏற்றதாக ட்ரம்ப் தகவல்!

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்ற தனது கோரிக்கையை சீனா ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது உலக நாடுகளுக்கும் சீனாவுக்கும் நன்மை பயக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா அமைதியான வழிமுறையை விரும்புவதாகவும், தேவைப்பட்டால் போரிடத் தயார் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அதேவேளை, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சீன வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!