இலங்கை

மர்மமான முறையில் கிடந்த என்புக்கூடு!

யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித என்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள பற்றைக் காணி ஒன்றில் என்புக் கூடுகள் இருப்பதாக காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது.

இந்த என்புக் கூடு, சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மேலும், குறித்த என்புக்கூடு பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!