ஐரோப்பிய ஒன்றியத்தின் சில விதிகளை நாடாளுமன்ற வாக்கெடுப்பின்றி ஏற்கும் புதிய சட்டம்
பிரதமர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் சில விதிகளை ஏற்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
உணவுத் தரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஐரோப்பிய விதிமுறைகளுடன் நாட்டை ஒருங்கிணைப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.
இந்த நடவடிக்கை வணிக நிறுவனங்களின் செலவுகளை குறைக்கும் என்றும், பிரெக்ஸிட் காரணமாக ஏற்பட்ட ஆவணச் சுமையையும் தளர்த்தும் என்றும்
அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஆனால், இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரநிலைகள் தொடர்பான பல ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் மூலம், ஐரோப்பாவில் புதிய விதிகள் அறிமுகமாகும் போது, அவற்றை நாடாளுமன்றத்தில் விரிவாக ஆய்வு செய்யும் வாய்ப்பு குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.





