‘ஜனநாயகன்’ வெளியானது அரசியல் சதி!
‘ஜனநாயகன்’ படத்தை இரகிசயாக வெளியிட வைத்து வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என தமிழக பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
படம் வெளியானமை தொடர்பில் சி.பி.ஐ. விசாரணை கோர விஜய் தயாரா என சவாலும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதால் 500 கோடி ரூபாவுக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி அனுதாப அரசியல் நடத்துகிறார் விஜய்.
பாஜக மீதும் மத்திய அமைச்சர் எல். முருகன் மீதும் பொய் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக காவல்துறையில் இதுவரை ஏன் விஜய முறைப்பாடு அளிக்கப்படவில்லை? சென்சார் போர்டிலும் ஏன் முறையிடவில்லை?
ஜனநாயகம் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு மத்திய அமைச்சர் முருகனும் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறி இருப்பது வடிகட்டிய பொய். அவர் மீது பாஜக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.





