“தீமை வெற்றி பெறாது” – ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் கருத்து!
ஈரானுடனான போர் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், தீமை வெற்றி பெறாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் வெளியிட்ட ஈஸ்டர் செய்தியில் அவர் இந்த கூற்றை முன்வைத்துள்ளார்.
அந்த செய்தியில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் “இறுதியில், தீமையும் அக்கிரமமும் வெற்றி பெறாது என்பதை அறிந்து, கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் வாழலாம்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வான்பரப்பில் F-15 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன அமெரிக்க விமானியைக் கண்டுபிடிப்பதில், அமெரிக்கா ஈரானுடன் ஒரு பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது விமானத்தில் இருந்த இரண்டு பணியாளர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன விமானிக்காக £50,000 டொலர்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக கூறப்படுகிற நிலையில் ட்ரம்பின் இந்த செய்தி வந்துள்ளது.





