உலகம்

அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் – பேச்சுவார்த்தைகளை பாதிக்குமா?

ஈரானில் அமெரிக்க ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், ஒரு மாத காலமாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது என்று ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த, காணாமல் போன விமானிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை அவர் கூற மறுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் போர் விமானமான F-15 நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானப் பணியாளர் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேடுதலுக்காக களமிறக்கப்பட்ட இராணுவ ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா முன்மொழிந்துள்ள யோசனையை ஈரான் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!