உலகம்

அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளதுடன், வான்வெளிகள் அவ்வப்போது மூடப்படுவதால் சர்வதேச விமானப் பயணங்களில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கு வெளியேயுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர அலுவலகங்கள் இலக்கு வைக்கப்படலாம் என இராங்காங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஈரானுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்கள் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க நலன்கள் அல்லது அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்கள் மீது தாக்குதல்களை நடத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் தமது பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!