இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் – 35 பேர் மீட்பு! நூற்றுக்கணக்கானோர் மாயம்!
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் ஈரானிய கப்பல் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
அந்த கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 100 பேர் காணாமல்போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை காலி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு விமானத்தை அனுப்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீர்மூழ்கிக் கப்பல் மீதான தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.





