உலகம்

அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்!

“ அமெரிக்காவுடன் ஈரான் பேச்சு நடத்தாது. தன்னைதானே தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது.”என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் அலி லாரிஜானி Ali Larijani தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கம் ஊடாகவே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘‘டொனால்ட் ட்ரம்ப் தனது தவறான நம்பிக்கைகளால் பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார்.

தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க படையினர் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். இன்று, ஈரான் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.

ஈரானிய ஆயுதப்படைகள் படையெடுப்பைத் தொடங்கவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம்’’ எனவும் ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஈரான், அமெரிக்காவுடன் ஓமன் அரசு மூலம் பேச்சு முன்னெடுப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே ஈரான் தரப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!