ஈரான் மக்களுக்கு சுதந்திரம் – ட்ரம்ப் அறிவிப்பு!
ஈரானில் ‘சுதந்திரம்’ தான் தனது முக்கிய குறிக்கோள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து வொஷிங்டன் போஸ்ட்டிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரான் “பாதுகாப்பான” இடமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறிய அவர், எனக்கு ஒரு பாதுகாப்பான தேசம் வேண்டும், அதுதான் நமக்கு இருக்கப் போகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று காலை முதல் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
(BREAKING NEWS) அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது குண்டு மழைப் பொழிந்த இஸ்ரேல்!





