கருத்து & பகுப்பாய்வு

புலம்பெயர்வு சர்ச்சை : ஒருவரை தடுக்க 8,000 பவுண்டு – வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியா – பிரான்ஸ் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக நுழைய முயலும் புலம்பெயர்வோர் தொடர்பான பிரச்சனை பரவலாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், இதற்காக செலவிடப்படும் மக்கள் வரிப்பணமும் பெரும் கேள்வியை எழுப்புகிறது.

முன்னதாக, பிரித்தானியா 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை சிறிய படகுகள் மூலம் கால்வாயைக் கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்வோரை தடுக்க பிரான்ஸுக்கு மொத்தமாக 540 மில்லியன் யூரோக்கள் வழங்க ஒப்பந்தம் செய்தது. இந்த நிதி பெரும்பாலும் கடற்படை பாதுகாப்பு, கடற்கரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அதற்கும் மேலாக, கடந்த ஆண்டு மட்டும் பிரித்தானியா பிரான்சுக்கு 175 மில்லியன் பவுண்டுகள் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள கணக்குகளின்படி, தடுத்து நிறுத்தப்பட்ட ஒவ்வொரு புலம்பெயர்வோருக்காக சுமார் 7,786 முதல் 8,000 பவுண்டுகள் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இதனால், மக்களின் வரிப்பணம் உண்மையில் பயனுள்ளதாக அமைகிறதா என்ற கேள்வி எழுகிறது. பெரும் தொகை செலவிடப்பட்டாலும், 2025 ஆண்டில் மட்டும் 41,472 பேர் வெற்றிகரமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்திருப்பது பரிசோதனைக்குரிய நிலை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனை பல அடுக்குகளைக் கொண்டது. ஒருபக்கம், மனிதக் கடத்தலை தடுக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். மறுபக்கம், செலவின வெளிப்படைத்தன்மை, கணக்கெடுப்பு மற்றும் அதன் பயன் குறித்து பொதுமக்களுக்கு தெளிவு வழங்கப்பட வேண்டும்.

பிரச்சனையின் வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இவை வெறுமனே “சட்டவிரோத குடியேற்றம்” என்ற சூழலில் மட்டும் வருவதில்லை. பின்புலத்தில் போர், வறுமை, அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் மனிதக் கடத்தல் கும்பல்கள் உள்ளன. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சில ஆசிய நாடுகளில் இருந்து புலம்பெயர்வோர் கடலுக்குள் இறங்கி ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

இதற்கிடையில், ஒரு நாட்டுக்கும் தன் எல்லையை பாதுகாக்க உரிமை உள்ளது. “நாம் எல்லையை வலுப்படுத்தி மனிதக் கடத்தல் கும்பல்களை உடைக்க வேண்டும்” என பிரித்தானியா கூறுகிறது.இதேவேளை, “நாம் ஏற்கனவே கடற்கரை கண்காணிப்பு பொலீஸ், ட்ரோன் மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், இதற்குத் தேவையான நிதி வழங்கப்பட வேண்டும் என பிரான்ஸ் கூறுகிறது.

ஆனால் மக்கள் கேட்கும் கேள்வி அதுவல்ல. 540 மில்லியன் யூரோ மற்றும் 175 மில்லியன் பவுண்டு செலவு செய்யப்பட்டு ஒரு நபருக்கு சுமார் 8,000 பவுண்டு செலவாகியதாகவும், அதற்கிடையில் 41,472 பேர் வெற்றிகரமாக நுழைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த ஒப்பந்தம் உண்மையில் வேலை செய்கிறதா என்பதில் சந்தேகம் உருவாகிறது.

இந்த பிரச்சனையை மூன்று கோணங்களில் பார்க்கலாம் முதலாவது பாதுகாப்பு கோணம், நிதி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவாகி வருகிறது. கடற்கரை ரோந்து, ரேடார், ட்ரோன், காவல்துறை, கடற்படை போன்றவற்றை வலுப்படுத்துகிறது. ஆனால் மனிதக் கடத்தல் கும்பல்கள் முறைகளை மாற்றிக்கொண்டு செயல்படுகின்றன, இது “cat and mouse game” மாதிரியான நிலையை உருவாக்குகிறது.

இரண்டாவது மனித உரிமை கோணம், கால்வாய் கடக்க முயற்சிக்கும் போது உயிரிழப்புகள் நடக்கின்றன. 2025 இல் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அதிகரிப்பது மனிதர்களை இன்னும் ஆபத்தான வழிகளுக்கு தள்ளக்கூடாது.

மூன்றாவது பொருளாதார கோணம், வரி கட்டும் மக்களுக்கு இது மிகவும் முக்கியம். “எங்கள் பணம் எங்கே செல்கிறது? இதன் பயன் என்ன?” என்ற கேள்விகள் எழுகின்றன. வெளிப்படைத்தன்மை இல்லாத போதும், நம்பிக்கை குறைகிறது.

பிரச்சனையின் நீண்ட கால தீர்வுக்கான கேள்விகள்

சட்டபூர்வமான, பாதுகாப்பான குடியேற்ற வழிகளை அதிகரிக்க வேண்டுமா?
அகதி விண்ணப்பங்களை வேகமாக பரிசீலிக்கப்பட வேண்டுமா?
மனிதக் கடத்தல் கும்பல்களை சர்வதேச அளவில் ஒடுக்க வேண்டுமா?
எல்லை பாதுகாப்பை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டுமா?
சிலர் கடுமையான சட்டம் தீர்வு எனக் கூறுகிறார்கள். சிலர் அதற்க மாறாக கருத்துகளை வெளியிடுகின்றனர்.
அதனால் அரசியல் ரீதியிலும் இது பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. பிரச்சனை ஒருபக்கம் எல்லை பாதுகாப்புக்கு முக்கியம், மற்றபக்கம் உயிர் பாதுகாப்பு அவசியம். இரண்டுக்கும் நடுவே சமநிலை காண்பதே சவால்.

Sainth

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை
error: Content is protected !!