இலங்கை செய்தி

விஜித ஹேரத் நாளை ஜேர்மன் பயணம்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath இரு நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நாளை (26) ஜேர்மன் செல்கின்றார்.

ஜேர்மன், ஆசிய பசிபிக் வணிக சங்கம் மற்றும் பிரெமன் அத்தியாயத்தால் வழங்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் இடம்பெறுகின்றது.

இதன்போத வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களில் அவர் பங்கேற்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் பிரெமன் அத்தியாயத்தின் 125 ஆவது ஆண்டு விழா தொடர்பான நிகழ்வுகளில் ஆசியாவிலிருந்து கௌரவ விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கின்றார்.

ஜேர்மன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளுடன் முக்கிய சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!