உலக நாடுகள் மீதான வரி விதிப்பை நியாயப்படுத்தும் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் தனது வரி விதிப்பு கொள்கைகளை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
தனது நாட்டு மக்கள் செலுத்தும் வருமான வரிகளை எளிதாக்கும் நோக்கில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், இது மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
1 மணி நேரம் 48 நிமிடங்கள் மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி, “ஒரு சகாப்தத்திற்கு ஏற்ற மாற்றத்திற்கு” தான் பொறுப்பு என்றும் கூறினார்.
முன்னர் அதிக இறக்குமதி வரிகளை நீக்குவதற்கான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவை ட்ரம்ப் மேலும் விமர்சித்துள்ளார்.
ட்ரம்பின் கூற்றுப்படி, அமெரிக்க பொருளாதார மாற்றத்திற்கு வரிகள் விதிப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.





