வேலைவாய்ப்பு மோசடி – 1000 கென்யர்களை ஏமாற்றிய ரஷ்யா!
வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பொய்க்கூறி சுமார் 1000 கென்யர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிடுவதற்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரழந்துள்ளதாக கென்ய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்த அறிக்கையை கிமானி இச்சுங்வா (Kimani Ichung’wah) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ரஷ்ய தூதரக அதிகாரிகள் வேலைவாய்ப்பு முகவர்களுடன் இணைந்து இந்த மோசடியை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தகவல்கள் வந்துள்ளன.
இதற்கிடையே உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த உள் விவாதங்களுக்குத் தயாராகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.





