உலகம்

பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – 16 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் எரிவாயு சிலிண்டர்  இன்று வெடித்து சிதறியதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி  முழுமையாக இடிந்து விழுந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதத்தின் முதல் நாளில் குடியிருப்பாளர்கள் உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்  என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (Asif Ali Zardari)  உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். அத்துதுடன் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

மேலும் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பு குறித்த சோதனைகளை அமல்படுத்தவும் ஜனாதிபதி சர்தாரி அழைப்பு விடுத்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!