உலகம்

கலிபோர்னியா பனிச்சரிவு – மாயமான 08 பேரின் உடல்கள் மீட்பு!

கலிபோர்னியாவின் தஹோ ஏரி அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமாகியிருந்த 09 பேரில் 08 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரின் உடலை தேடும் நடவடிக்கை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏரிக்கு அருகே 09 பெண்கள் மற்றும் 06 ஆண்கள் உள்ளடங்களாக 15 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்ட நிலையில் பனிச்சரிவில் சிக்கினர்.

அப்போது மீட்புக் குழுவினர் 05 பெண்கள் உள்ளடங்களாக 06 பேரை பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும் 09 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் மாயமானவர்களில்  08 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

1981 ஆம் ஆண்டு வொஷிங்டனின் மவுண்ட் ரெய்னியர் பகுதியில் 11 மலையேறிகள் பனிச்சரிவில் சிக்கி உயிரழந்ததை தொடர்ந்து பதிவாகிய மோசமான இழப்பாக இந்த சம்பவம் காணப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!