உலகம்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலிற்கு ( Yoon Suk-yeol) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கட்டாய இராணுவ சட்டத்தை அமுல்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“இராணுவச் சட்டத்தின் பிரகடனம் மிகப்பெரிய சமூக இழப்புகளை ஏற்படுத்தியது, மேலும் பிரதிவாதி அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூனுக்கு  (Kim Yong-hyun) 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் புலனாய்வு கட்டளைத் தலைவர் நோ சாங்-வோனுக்கு (Noh Sang-won) முறையே 18 ஆண்டுகள், முன்னாள் தேசிய காவல் நிறுவன ஆணையர் சோ ஜி-ஹோவுக்கு (Cho Ji-ho) 12 ஆண்டுகள், முன்னாள் சியோல் பெருநகர காவல் நிறுவன ஆணையர் கிம் போங்-சிக் (Kim Bong-sik) 10 ஆண்டுகள், முன்னாள் சியோல் பெருநகர காவல் நிறுவன தேசிய சட்டமன்ற பாதுகாப்புப் பிரிவுத் தளபதி மோக் ஹியூன்-டேவுக்கு (Mok Hyun-tae) 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!