அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையம்!
ஜெட் ப்ளூ விமானம் அவசரமாக தரையிறங்கியதை அடுத்து, நியூவார்க் லிபர்ட்டி ( Newark Liberty) சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புளோரிடாவின் பாம் பீச்சிற்குச் செல்லவிருந்த ஏர்பஸ் A320 விமானமான ஜெட் ப்ளூ விமானம் புறப்பட்ட சிறுதி நேரத்திலேயே இயந்திர கோளாறு தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளது.
விமானியின் அறையில் புகை வந்ததாகக் குழுவினர் தெரிவித்தனர். இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் ஸ்லைடுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறிப்பிடத்தக்க விமான தாமதங்களுக்கு வழிவகுத்தது, நியூவார்க்கிலிருந்து புறப்படும் விமானங்கள் சராசரியாக 90 நிமிடங்கள் தாமதமாக பயணித்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





